/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்
/
செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்
ADDED : செப் 13, 2024 06:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே செவிலிமேடில், சமீப நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.
மின்வாரியத்திற்கு மொபைல்போன் வாயிலாக புகார் அளித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், செவிலிமேடு பகுதிவாசிகள், திடீரென காஞ்சிபுரம்- - வந்தவாசி சாலையில், இரவு 11:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர், அப்பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தினர்.
மின்வெட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இரவு 12:30 மணிக்கு மின்சாரம் சீரானது.