/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்கள் பிறந்த நாளில் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்
/
மாணவர்கள் பிறந்த நாளில் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்
மாணவர்கள் பிறந்த நாளில் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்
மாணவர்கள் பிறந்த நாளில் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 06, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் 1 - 3வது வார்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பயிலும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் அவர்களுடைய பிறந்த நாளில் பரிசு பொருட்கள் வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சந்தான லட்சுமி தலைமை வகித்தார். இதில், பள்ளி வளாகத்தில் நடந்த இறைவணக்க கூட்டத்தில்,பிறந்த நாள் கொண்டாடிய நான்கு மாணவ- - மாணவியருக்கும், சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதமாக, பொறியாளர் ரவி சொக்கலிங்கம் மாணவர்களுக்கு, உண்டியலும், சிறு தொகையும் வழங்கி கவுரவித்தார்.
பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.