/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 04, 2024 01:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆயுதப்படை பயிற்சி மையத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன.
இந்த போட்டிக்கு, காஞ்சிபுரம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜஸ்டின் ஸ்டான்லி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கைப்பந்து ஆகிய நான்கு விதமான விளையாட்டு போட்டிகளில், முதல், மற்றும் இரண்டாவது இடம் பிடித்தவர்களுக்கு, நினைவு பரிசு மற்றும் சான்றுகளை, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் வழங்கினார்.