/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரக்கோட்டம் கோவிலில் கட்டண தரிசனத்தால் சிக்கல்
/
குமரக்கோட்டம் கோவிலில் கட்டண தரிசனத்தால் சிக்கல்
ADDED : மார் 29, 2024 08:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலின் மூலவர் சன்னிதியில், இலவச தரிசனம் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் என, இரு வகையில் பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
இதில், 20 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், மூலவர் சன்னிதியில் உள்ளே நின்று தரிசனம் செய்யும்போது, இலவச தரிசனம் செய்வோருக்கு இடையூறாக உள்ளனர்.
சுவாமியை மறைத்தபடி பக்தர்கள் நிற்பதால், இலவச தரிசனம் செய்ய முடியவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவில் ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கட்டண தரிசனம் செய்ய மூலவர் சன்னிதி செல்லும் பக்தர்கள், சுவாமியை மறைக்காமல் நிற்பதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

