/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்க நிர்வாகிகளுக்கு துணை போகும் பி.டி.ஓ.,
/
சங்க நிர்வாகிகளுக்கு துணை போகும் பி.டி.ஓ.,
ADDED : ஆக 04, 2024 10:40 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 61 ஊராட்சிகள் உள்ளன. இதில், வாரணவாசி, ஈஞ்சம்பாக்கம், கொட்டவாக்கம், மேல் பொடவூர், அயிமிச்சேரி, கிதிரிப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சின்னிவாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி செயலர்களுக்கு, வாலாஜாபாத் கிராம ஊராட்சிகள் நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நேற்று முன்தினம் இடமாறுதல் அளித்து உள்ளார்.
இதில், ஊரக வளர்ச்சி துறைச் சேர்ந்த குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது என, ஊராட்சி செயலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதவிர, ஊராட்சி செயலர்களும் விருப்ப இடமாறுதல் கேட்ட விண்ணப்பம் மற்றும் நிர்வாகம் நலன் கருதி என, இரு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலான இடமாறுதல், நிர்வாகம் நலன் கருதியே இருக்கும். ஊராட்சி செயலர்களின் விருப்ப விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
அதிலும், மருத்துவம் சார்ந்த பிரச்னை இருந்தால் மட்டுமே, ஊராட்சி செயலர்கள் விருப்ப கடிதம் ஏற்கப்படும். இடமாறுதல் ஆணையில், தனியார் என, அழைக்கப்படும் ஊராட்சி செயலர்கள் விருப்பம் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இது, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கிறது என, தெள்ளத் தெளிவாக காட்டுகிறது என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் கூறியதாவது:
ஊரக வளர்ச்சி துறை சார்ந்த, இரு சங்கத்தில் இருக்கும், ஊராட்சி செயலர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளன. மேலும், ஊராட்சி செயலர்கள் விருப்பம் தெரிவித்து, அளித்த கடிதத்தின் பேரிலும் இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், எந்த ஒரு நோக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.