/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பொது விருந்து
/
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பொது விருந்து
ADDED : ஆக 15, 2024 10:33 PM

குன்றத்துார்:மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இங்கு பொது விருந்து நடந்தது.
இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொது விருந்தை துவக்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச புடவைகளை வழங்கி சென்றார். மாங்காடு நகராட்சி தலைவர் சுமதி முருகன், கோவில் செயல் அலுவலர் சித்ராதேவி, கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், நகராட்சி துணைத் தலைவர் ஜபருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல, சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பொது விருந்தில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, தாம்பரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நடந்த பொது விருந்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

