/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் பணி ஸ்ரீபெரும்புதுாரில் தீவிரம்
/
மழைநீர் வடிகால் பணி ஸ்ரீபெரும்புதுாரில் தீவிரம்
ADDED : செப் 04, 2024 01:11 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார்பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை நெடுஞ் சாலைத் துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக, 6.09 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் முதல், ஜெயா மருத்துவமனை வரை, சாலையின் இருபுறமும் 2.2 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
1.3 கி.மீ., பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என, நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்த பின், பேரூராட்சியில் சேதமான சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.