/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபால நீர்வழித் தடத்தில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் மழைநீர்
/
சிறுபால நீர்வழித் தடத்தில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் மழைநீர்
சிறுபால நீர்வழித் தடத்தில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் மழைநீர்
சிறுபால நீர்வழித் தடத்தில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் மழைநீர்
ADDED : ஆக 09, 2024 12:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை படவேட்டம்மன் கோவில் பின்புறம் உள்ள நடுத்தெருவின் குறுக்கே, அப்பகுதியில் பெய்யும் மழைநீர் செல்லும் வகையில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் முறையாக சிறுபாலத்தை பராமரிக்காததால், பாலத்தின்கீழ் உள்ள நீர்வழிப் பாதையில் மண் துகள்களாலும், செடி, கொடிகள்மண்டியுள்ளதாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், லேசான மழைக்கே சிறுபாலம் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே, மழைநீர் வடிகால்வாயையும், சிறுபாலத்தின் கீழுள்ள நீர்வழித் தடத்தையும் துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.