/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் சின்னய்யங்குளத்தில் சுகாதார சீர்கேடு
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் சின்னய்யங்குளத்தில் சுகாதார சீர்கேடு
காலி மனையில் மழைநீர் தேக்கம் சின்னய்யங்குளத்தில் சுகாதார சீர்கேடு
காலி மனையில் மழைநீர் தேக்கம் சின்னய்யங்குளத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 25, 2024 06:16 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, 50வது வார்டு சின்னய்யங்குளம், தாண்டவராயன் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் மழைநீருடன், அப்பகுதிவாசிகளின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சேர்ந்து குட்டைபோல தேங்கி பாசி படர்ந்துள்ளது.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், வீட்டில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. கொசுவை விரட்ட, கொசுவர்த்தி சுருள், லிக்யூட், கொசு ஊதுவர்த்தி ஏற்றி வைத்தால் குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
எனவே, தனியார் மனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,சின்னய்யங்குளம் பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.