/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மே 5ல் வணிகர் தினம் ராஜாஜி மார்க்கெட் ‛லீவ்'
/
மே 5ல் வணிகர் தினம் ராஜாஜி மார்க்கெட் ‛லீவ்'
ADDED : மே 02, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 41வது வணிகர் தினம், வரும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மே 5ல் மூடப்படுகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் ஓரிக்கையில் இயங்கும் தற்காலிக ராஜாஜி மார்க்கெட்டிற்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.