/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளர்ச்சியடையும் நகரத்திற்கு அங்கீகாரம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியாக மாறியது
/
வளர்ச்சியடையும் நகரத்திற்கு அங்கீகாரம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியாக மாறியது
வளர்ச்சியடையும் நகரத்திற்கு அங்கீகாரம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியாக மாறியது
வளர்ச்சியடையும் நகரத்திற்கு அங்கீகாரம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியாக மாறியது
ADDED : ஆக 15, 2024 08:25 PM
ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா, ஆண்டு வருமானம் உள்ளிடவைகளை அடிப்படையாக கொண்டு, பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான கருத்துருக்களை நகராட்சி நிர்வாக துறை இயக்குனரகம் கடந்த ஆண்டு அனுப்பியது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த, 2023ம் ஆண்டு நவம்பர் 22ல் பேரூராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரை பொருத்தவரை, தொழில் நகரமாக மட்டும் இல்லாமல், வைணவ மகான் ராமானுஜர் அவதார தலமாக உள்ளதால், ஆண்மிக தலமாக விளங்கி வருகிறது.
இதனால், தொழில் ரீதியாக மட்டும் இல்லாமல், இங்குள்ள ராமானுஜர் கோவிலுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த செல்கின்றனர். இதனால், ஸ்ரீபெரும்புதுார் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரரைச் சுற்றி, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் என ஐந்து சிப்காட் தொழிற்பூங்காகளில், ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி வசித்து வருகின்றனர். இதானல், பொருளாதார ரீதியாகவும் ஸ்ரீபெரும்புதுார் வளர்ச்சி அடைந்து வருகின்றது.
ஸ்ரீபெரும்புதுார் தற்போது, 19.39 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 15 வார்டுகளை கொண்டு இயங்கி வருகிறது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக விதியின்படி, நகராட்சியாக தரம் உயர்த்த, மக்கள் தொகை 30,000க்கும் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், ஸ்ரீபெரும்புதுாரில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24,864 ஆக இருப்பினும், பேரூராட்சியின் கடந்த மூன்று ஆண்டு சராசரி வருமானம் 10.57 கோடியாக உள்ளது.
இதனால், 2024ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி சட்ட திருத்தம் கொண்டு வந்ததின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதுாரில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளதால், ஸ்ரீபெரும்புதுார் 2ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாணை வெளியான ஆறு வாரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியாக செயல்படும். சுற்றியுள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைப்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது உள்ள பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிலாக, நகராட்சி கமிஷனர் அந்தஸ்து பெறும்.