/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வதீர்த்த குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
/
சர்வதீர்த்த குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
ADDED : மே 07, 2024 09:28 PM
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், காமராஜர் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 59. இவர், நேற்று காலை நடைபயிற்சி செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும், வீட்டிற்கு சுந்தரமூர்த்தி வரவில்லை. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், மொபைலில் இவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தகுளத்தின் படிக்கட்டில் இருந்த இவரது மொபைல்போனை எடுத்து பெண் ஒருவர் பேசியுள்ளார்.
சுந்தரமூர்த்தியின் மொபைல்போன், வாட்ச் போன்ற பொருட்கள் குளத்தின் படிக்கட்டில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் குளத்திற்கு சென்று அவரை தேடியுள்ளனர்.
சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குளத்தில் இறங்கி தேடினர். பிற்பகல் 12:00 மணியளவில், சுந்தரமூர்த்தியின் சடலம் குளத்தில் கிடைத்தது.
குளத்தில் கை, கால்களை கழுவ இறங்கும்போது தவறி மூழ்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவரது மகன் சிவராஜன் புகார் அளித்துள்ளார்.

