/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 4 சட்டசபை தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

ADDED : ஆக 30, 2024 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 1,398 ஓட்டுச்சாவடிகளின் விபரங்கள் அடங்கிய வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, கலெக்டர் கலைச்செல்வி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார்.
முதல் பிரதியை, வருவாய் கோட்டாட்சியர்கள் வெங்கடேசன், சரவணகண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, கட்சி பிரதிநிதிகள் அடுத்தடுத்து பெற்றுக் கொண்டனர்.
தற்போதுள்ள ஓட்டுச்சாவடியின் பெயர் மாற்றம், இட மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் முன்மொழிவுகள், வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடியாக இருப்பின், பழுதடைந்த கட்டடம் அல்லது பழமையான கட்டடமாக இருப்பின், அரசியல் கட்சிகள் முன்மொழிவுகள் வழங்கலாம்.
தேர்தல் கமிஷனால் அறிவுறுத்தப்பட்ட இப்பணியை முழுமையாக முடித்து கொடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார்.