/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார்களில் கட்சிக்கொடி அதிரடியாக அகற்றம்
/
கார்களில் கட்சிக்கொடி அதிரடியாக அகற்றம்
ADDED : மார் 25, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சி சின்னங்கள், கட்சிக் கொடிகள், கட்சி தலைவர்களின் படங்களை மறைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், ஏராளமான கார்களில் கட்சிக் கொடிகள் அகற்றப்படாமல் சுற்றி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று, தேர்தல் பறக்கும் படையினர், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார்களை சோதனை செய்து, கார்களில் இருந்த கட்சிக் கொடிகளை அதிரடியாக அகற்றினர்.

