/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED : பிப் 26, 2025 06:37 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பர்வதவர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கொடிமரம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னிதியின் வலதுபுறத்தில் உற்சவர் அமைந்துள்ளார். இடதுபுறத்தில் அய்யப்பன் உள்ளார்.
இந்த சன்னிதி அருகே வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளார். இக்கோவிலில், மாசிமகம், கந்தசஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.
இந்த கோவிலில் ராஜகோபுரம் மற்றும் மண்டப பகுதிகளின் சில இடங்கள் சிதிலமடைந்ததை அடுத்து, சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதிவாசிகள் சார்பில் தீர்மானக்கப்பட்டது.
அதன்படி, ராமலிங்கேஸ்வரர் கோவிலில், அய்யப்பன், முருகர் மற்றும் மற்ற சன்னிதிகளுக்கும், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கும் பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

