/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாய் உடைப்பு ஆம்பாக்கத்தில் சீரமைப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பு ஆம்பாக்கத்தில் சீரமைப்பு
ADDED : ஏப் 26, 2024 11:03 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்டது ஆம்பாக்கம் கிராமம்.
இக்கிராமத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் வீரபாண்டி கட்டபொம்மன் தெருவில், தனிநபர் ஒருவர் தன் வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பொருத்த பள்ளம் தோண்டிய போது, பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்படாததால், அப்பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தொடர்ந்து குடிநீர் வீணாகி வந்தது.
கசிவு ஏற்பட்டு தேக்கமாகும் தண்ணீர், மீண்டும் குழாய் வழியாக வீட்டு இணைப்பு குழாய்களில் குடிநீராக வினியோகிக்கப்பட்டது.
இதனால் தொற்றுநோய் அபாயம் ஏற்படும் என, அப்பகுதியினர் புலம்பி வந்தனர்.
இதுகுறித்து, கடந்த 25ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ஆம்பாக்கம் வீரபாண்டி கட்டபொம்மன் தெருவில் உடைந்த குடிநீர் குழாய் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு, குடிநீர் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

