/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் துார்வார மாம்பாக்கத்தில் வேண்டுகோள்
/
வடிகால்வாய் துார்வார மாம்பாக்கத்தில் வேண்டுகோள்
ADDED : மார் 05, 2025 01:11 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், ஈஸ்வரன் கோவில் அருகே, 2019ம் ஆண்டு, 9 லட்சத்து 95,000 ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் வெட்டும் பணியினை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
அதன் படி, 15 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மழைநீர் வடிகாலை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.
கால்வாயில், கழிவுநீர், குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால், கால்வாய் அடையாளம் தெரியமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை காலங்களில் கால்வாய் வாயிலாக, மழைநீர் வெளியேற வழியின்றி, அருகில் உள்ள குடியுருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, மாம்பாக்கம் செல்லும் பிரதான் சாலையில், சிவன் கோவில் அருகில் உள்ள மழைநீர் கால்வாயை, பருவ மழைக்குள் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.