/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிதிலமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
/
சிதிலமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் போஜக்கார தெரு உள்ளது. இத்தெருவில், வீட்டு மின் இணைப்புகளுக்காக பொருத்தப்பட்ட ஒயர்களை தாங்கி நிற்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தெருவின் மையப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம், மிகவும் சிதிலமடைந்து, சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது.
கம்பத்தின் கீழ்ப்பகுதி மிகவும் சிதிலமடைந்து உள்ளதால், காற்று மழை நேரங்களில், அக்கம்பம் உடைந்து விழக்கூடும் என அப்பகுதி வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றி, அப்பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.