/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோமங்கலம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க கோரிக்கை
/
சோமங்கலம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 06, 2024 11:57 PM

படப்பை:குன்றத்துார் அருகே சோமங்கலம்-- - சேத்துப்பட்டு சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை குறுக்கே அடையாறு கிளை கால்வாய் செல்கிறது.
மழை காலங்களில் இந்த கால்வாய் வழியே 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும். பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் இந்த கால்வாய் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாலத்தின் கீழ் ஷட்டர்களுடன் கூடிய தடுப்பணையை அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மணிமங்கலம் - --நடுவீரப்பட்டு சாலையில் அடையாறு கிளை கால்வாய் குறுக்கே பாலத்துடன் ஷட்டர்களுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்கு கோடையிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்து உள்ளது. கால்நடைகள் தடுப்பணையில் தண்ணீர் குடித்து பயன் பெறுகின்றன.
அதே போல, சோமங்கலம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

