/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
/
சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 24, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் பிரதான சாலை வழியாக தென்னேரி, சிறுவேடல், ஏனாத்துார், வையாவூர், மருதம், ஊத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளதோடு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த நிலையில் சிங்காடிவாக்கம் சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

