/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதையில் அட்டகாசம் வாலிபருக்கு 'காப்பு'
/
போதையில் அட்டகாசம் வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 26, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் மாலை, ஒரகடம் மேம்பாலம் அருகில் ரோந்து சென்றனர்.
அப்போது, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், ஏரிக்கரையோரம் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில், மதுபோதை தலைக்கேறிய வாலிபர், அப்பகுதியில் செல்வோரை தகாத வார்த்தைகளில் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்ற வாலிபரை கைது செய்தனர்.

