/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெட்டுக்கத்தியுடன் திரிந்த இருவருக்கு காப்பு
/
வெட்டுக்கத்தியுடன் திரிந்த இருவருக்கு காப்பு
ADDED : ஆக 02, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல் ‛யமஹா' பைக்கில் வந்த இருவரை மடக்கி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் நடத்திய சோதனையில், வெட்டு கத்தி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, சாலமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 22, நடுவீரப்பட்டைச் சேர்ந்த பிரணவ், 21, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.