ADDED : ஆக 18, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், 32, என்பவர், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட, கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார்.
லாரியை மடக்கி சோதனை செய்ததில், அதில், 57 மாடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. பின், ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோசாலையில் மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.

