/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 05, 2024 09:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் உள்ள 43வது வார்டு அதியமான் நகருக்கு உட்பட்ட சம்பந்தமூர்த்தி அவென்யூவில், இரட்டை கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில், 23 அடி சாலையை ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சாலை நகர ஊரமைப்பு துறையின் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சாலையில் கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதை அகற்றி மாநகராட்சி வாயிலாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அதியமான் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முதல்வர் தனிப்பிரிவு, காஞ்சிபுரம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு மனு அனுப்பினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்து, அதியமான் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், ஜனவரி 29ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார்.
அதில், உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டு இருந்தது.
பதில் மனு அனுப்பி ஆறு மாதங்களுக்கு மேலாகியும், ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என, நலச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.