/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கேபிள் பதிக்க தோண்டிய பள்ளம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
கேபிள் பதிக்க தோண்டிய பள்ளம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
கேபிள் பதிக்க தோண்டிய பள்ளம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
கேபிள் பதிக்க தோண்டிய பள்ளம் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மார் 02, 2025 12:23 AM

சிறுகாவேரிபாக்கம்,
காஞ்சிபுரத்தில் இருந்து, காவேரிபாக்கம், ஆற்காடு,வேலுார் செல்லும்வாகனங்கள் சிறுகாவேரிபாக்கம் வழியாக சென்றுவருகின்றன.
வாகன போக்குவரத்துநிறைந்த இச்சாலையில், சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து கீழம்பி கிராமம்வரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில், கேபிள் பதிக்க நிலத்தடியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு அமைக்கப்படவில்லை. இதனால், சாலையோரம்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், இரவில் நடந்து செல்லும் பாதசாரிகள் நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.