/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்
/
வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்
வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்
வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்
ADDED : பிப் 22, 2025 01:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராம கூட்டுச்சாலையில் இருந்து, வளத்துார் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.
இந்த சாலையோர வளைவுகளில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இரும்பாலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு சரிந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் இந்த தடுப்பை அகற்றினர். அதன்பின், தடுப்பு கம்பிகளை அமைக்கவில்லை.
இதனால், இச்சாலை வழியாக செல்வோர் அபாயகரமான வளைவுகளில் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.