/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் தொற்றுநோய் அபாயம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் தொற்றுநோய் அபாயம்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் தொற்றுநோய் அபாயம்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் தொற்றுநோய் அபாயம்
ADDED : ஆக 11, 2024 02:37 AM

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர், வந்தவாசி, கலெக்டர் அலுவலகம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள், விளக்கடி கோவில் தெருவழியாக சென்றுவருகின்றன.
வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், திருமண மண்டபங்கள், விளக்கொளி பெருமாள், துாப்புல் வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் சன்னிதி என, பல்வேறு கோவில்கள் உள்ளன.
இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற் கும் மேலாக 'மேன் ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், பாதசாரிகள் மன உளைச்சலுக்குஆளாகின்றனர்.
தொடர்ந்துவெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விளக்கடி கோவில் தெருவில், பாதாள சாக்கடையில்ஏற்பட்ட அடைப்பைமுழுதும் நீக்கமாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.