/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச் சுவர் சேதத்தால் கூரத்தில் விபத்து அபாயம்
/
தடுப்புச் சுவர் சேதத்தால் கூரத்தில் விபத்து அபாயம்
தடுப்புச் சுவர் சேதத்தால் கூரத்தில் விபத்து அபாயம்
தடுப்புச் சுவர் சேதத்தால் கூரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஆக 20, 2024 05:30 AM

கூரம்: ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பரந்துார், தண்டலம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாகசெல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வட கிழக்கு பருவ மழை காலங்களில், கம்பன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்தண்ணீரை கடந்து செல்வதற்கு சவுகரியமாக, கூரம், பரந்துார், மதுரமங்கலம் உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில், கம்பன் கால்வாய் குறுக்கே உயர் மட்ட தரைப்பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
இதில், கூரம் - ஒழுக்கோல்பட்டு கிராமம் இடையே, கம்பன் கால்வாய் குறுக்கே, தடுப்புசுவருடன் கூடிய உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலத்தின் தடுப்புச் சுவர் சமீபத்தில் பதிவு எண் தெரியாத வாகனம் மோதி சேதம் ஏற்பட்டு, சாய்ந்த நிலையில் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேத தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.

