/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாமல் தண்ணீரின்றி வாடும் சாலை மீடியன் செடிகள்
/
பராமரிப்பு இல்லாமல் தண்ணீரின்றி வாடும் சாலை மீடியன் செடிகள்
பராமரிப்பு இல்லாமல் தண்ணீரின்றி வாடும் சாலை மீடியன் செடிகள்
பராமரிப்பு இல்லாமல் தண்ணீரின்றி வாடும் சாலை மீடியன் செடிகள்
ADDED : மே 03, 2024 12:45 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் விரிவாக்கப்பட்ட நான்குவழி சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரால் நடுவே வைக்கப்பட்ட செடிகள், பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் இன்றி வாடி, கருகி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையானது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்தது.
குறுகிய சாலையால், நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடந்ததால், இச்சாலையை இருவழியில் இருந்து நான்குவழியாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, ஸ்ரீபெரும்புதுார் முதல், மணிமங்கலம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, வாகனங்களில் கரும்புகை, மண் துகள் அடங்கிய துாசிகளால் ஏற்படும் பாதிப்பினை குறைக்க, சாலை நடுவே, அரளி செடிகளை நெடுஞ்சாலைத் துறையினர் வைத்தனர்.
இந்த நிலையில் தற்போது, கோடையில் வெயில் தாண்டவம் ஆடிவரும் நிலையில், சாலை நடுவே வைக்கப்பட்ட செடிகள் பராமரிப்பு இல்லாமல், தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.