/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவலர் குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகள்
/
காவலர் குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகள்
காவலர் குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகள்
காவலர் குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகள்
ADDED : மார் 28, 2024 09:03 PM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, விஷ்ணு காவல் நிலையம் பின்புறம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் கட்டப்பட்ட, காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பணிமாறுதலில் வரும், போலீசார் இங்குள்ள குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் அரச மரக்கன்றுகள் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இதனால், கட்டடத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து வருகின்றன. மேலும், நாளடைவில், கட்டடம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகளை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.