/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடல்மங்கலத்தில் அங்கன்வாடி கட்ட ரூ. 17.25 லட்சம் ஒதுக்கீடு
/
கடல்மங்கலத்தில் அங்கன்வாடி கட்ட ரூ. 17.25 லட்சம் ஒதுக்கீடு
கடல்மங்கலத்தில் அங்கன்வாடி கட்ட ரூ. 17.25 லட்சம் ஒதுக்கீடு
கடல்மங்கலத்தில் அங்கன்வாடி கட்ட ரூ. 17.25 லட்சம் ஒதுக்கீடு
ADDED : பிப் 27, 2025 08:48 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து நிலையில் இருந்தது. இந்த அங்கன்வாடி கட்டடம் சில ஆண்டுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக அங்கன்வாடி மையம் அப்பகுதியில் உள்ள நுாலக கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு, போதிய இட வசதியும், கழிப்பிட வசதியும் இல்லாமல் உள்ளது.
மேலும், நுாலகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால், அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அரசு போட்டித் தேர்வர்கள் ஆகியோர் சென்று, படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 - 25 நிதி ஆண்டில், அங்கன்வாடி கட்டடங்களை புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், 17.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய அங்கன்வாடி மைய கட்ட கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.