/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.25 லட்சத்தில் 'டிஜிட்டல்' திரை பயன்பாடின்றி வீணாகும் அவலம்
/
ரூ.25 லட்சத்தில் 'டிஜிட்டல்' திரை பயன்பாடின்றி வீணாகும் அவலம்
ரூ.25 லட்சத்தில் 'டிஜிட்டல்' திரை பயன்பாடின்றி வீணாகும் அவலம்
ரூ.25 லட்சத்தில் 'டிஜிட்டல்' திரை பயன்பாடின்றி வீணாகும் அவலம்
ADDED : ஏப் 04, 2024 11:48 PM

காஞ்சிபுரம்:தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், 16 அடி அகலம், 10 அடி உயரத்தில், 'டிஜிட்டல்' திரை எனப்படும் மின் சுவர் கடந்த ஆண்டு செப்., 14ல் அமைக்கப்பட்டது.
இதில், அரசின் திட்டங்களையும், அறிவிப்புகளையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது
இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், தமிழக அரசின் சாதனை குறித்த செய்தி விளம்பரம் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வீணாகி வரும், டிஜிட்டல் திரை எனப்படும் மின் சுவரில், லோக்சபா தேர்லையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தலாம் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

