/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 31, 2024 12:42 AM

சென்னை:சென்னை, திருவேற்காடில் உள்ள எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில், ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் 668 மாணவர்களுக்கு பட்டங்களையும், 2.52 லட்சம் ரூபாய்க்கான சிறப்பு பரிசுகளையும் அளித்து சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது:
ஏட்டுக்கல்வியால் பட்டத்தை பெற முடியும். அதேநேரம், தனித்துவமான படைப்பாற்றலால் தான் வாழ்க்கையில் மேம்பட முடியும். மாணவர்கள், 'சைபர் செக்யூரிட்டி, டிரெண்டிங்' திறன்கள், டிஜிட்டல் களம் உள்ளிட்ட துறைகளில் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ராமச்சந்திரன், தலைவர் துரைசாமி, செயலர் தசரதன், துணைத் தலைவர் பரந்தாமன், தாளாளர் அமர்நாத், துணை செயலர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

