/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
/
அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
ADDED : ஆக 09, 2024 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், தேசியக் கொடிகள் விற்பனையை, நேற்று முதல் அஞ்சல் துறை துவக்கி உள்ளது.
நாடு முழுதும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என, பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் இருக்கும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தலைமை தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து விதமான அஞ்சலகங்களிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யும் திட்டம் நேற்று முதல் துவக்கப்பட்டு உள்ளது.
ஒரு, தேசியக் கொடியின் விலை 25 ரூபாய். ஆக. 13ம் தேதி வரையில் தேசிய கொடிகள் அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படும்.
பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக கொடிகள் விற்பனை செய்யப்படும். மேலும், https:/www.epostoffice.gov.in/ என்கிற இணையதளத்தின் வாயிலாக, ஐந்து கொடிகள் வரையில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்தார்.