/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 09, 2024 04:42 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் தாமல்வார் தெரு வழியாக, கோனேரிகுப்பம், ஏனாத்துார் ஊர்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் இரு நாட்களாக சாலையில் வழிந்தோடுகிறது.
இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால் நடந்து செல்வோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து வெளியே றும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.