ADDED : மார் 21, 2024 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்பக்கம் நுழைவாயிலை ஒட்டி, சக்ரபாணி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோர் சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் துார்நாற்றம் வீசுகிறது. அருகிலேயே ஆட்டோ நிறுத்தம் உள்ளதால், ஓட்டுனர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பேருந்து நிலைய நுழைவாயில் அருகில், சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ள இடத்தை சீரமைத்து, அப்பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

