/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியில் செத்துக் கிடக்கும் மீன்களால் கோவிந்தவாடியில் சுகாதார சீர்கேடு

ADDED : மே 26, 2024 03:24 PM

கோவிந்தவாடி: காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி மற்றும் சிற்றேரி உள்ளன.
இந்த இரு ஏரிகளிலும், தண்ணீர் வறண்டு இருப்பதால், மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டு உள்ளது. மீன் பிடிக்க ஏலம் எடுத்தவர், தேவையான மீன்களை விற்பனை எடுத்துக் கொண்டு, மிகச் சிறிய ரக மீன்களை ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். செத்துக் கிடக்கும் மீன்களால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, கோவிந்தவாடி நீர்வளத் துறை ஏரி, காஞ்சிபுரம் - -அரக்கோணம் பிரதான சாலை ஓரம் இருப்பதால், வாகன ஓட்டிகள் 1 கி.மீ., துாரத்திற்கு துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, கரை ஓரத்தில் செத்துக் கிடக்கும் மீன்களை, பள்ளம் தோண்டி மண்ணில் புதைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் விரும்பிகின்றனர்.