/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்கள் ஒரகடத்தில் விபத்து அபாயம்
/
சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்கள் ஒரகடத்தில் விபத்து அபாயம்
சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்கள் ஒரகடத்தில் விபத்து அபாயம்
சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்கள் ஒரகடத்தில் விபத்து அபாயம்
ADDED : ஆக 22, 2024 01:09 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகளுக்கு இடையே உள்ள ஒரகடம் சந்திப்பில் மேம்பாலம் உள்ளது.
பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஒரகடம் மேம்பாலம் வழியே வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையும், மேம்பாலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையும் செல்கிறது.
இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், தினமும் ஒரகடம் பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இச்சாலை வழியே அளவுக்கு அதிகாக ஜல்லிக் கற்கள் ஏற்றி செல்லும் லாரிகள், மேம்பாலத்தின் கீழ் திரும்பும் போது, ஜல்லிக் கற்கள் சாலையில் விழுந்து குவிந்துள்ளன.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள ஜல்லியின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், சாலையில் சிதறியுள்ள ஜல்லிக் கற்கள் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.