/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கேட் வசதி இல்லாத பள்ளி சுற்றுச்சுவர்
/
கேட் வசதி இல்லாத பள்ளி சுற்றுச்சுவர்
ADDED : ஆக 22, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரந்துார்:காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் ஊராட்சியில், நாகப்பட்டு துணை கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நாகப்பட்டு, அருந்ததியர்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் துவக்க கல்வி கற்று வருகின்றனர்.
இங்கு, படிக்கும் பள்ளி மாணவ - மாணவியரின் நலன் கருதி துவக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், நுழைவுவாயிலில் கேட் அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சுவர் கேட் அமைக்க அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியருக்கு காயமடைய வாய்ப்புள்ளது.