/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
13 கடைகளுக்கு 'சீல்' 150 கிலோ குட்கா பறிமுதல்
/
13 கடைகளுக்கு 'சீல்' 150 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 02, 2024 02:38 AM
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கீவளூர், மேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் பஜார் ஆகிய பகுதிகளில், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன், போலீசார் 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு தினங்கள் நடந்த சோதனையில், சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்ற போதை பொருட்கள் விற்று வந்த 13 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும், 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 150 கிலோ குட்காபறிமுதல் செய்யப்பட்டது.