/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டில் பதுக்கிய கோகைன் பறிமுதல்
/
வீட்டில் பதுக்கிய கோகைன் பறிமுதல்
ADDED : மே 10, 2024 10:03 PM
அண்ணா நகர்:போலீஸ் அமைச்சு பணியாளர் ஒருவரின் வீட்டில், விலை உயர்ந்த போதைப்பொருள் வைத்திருப்பதாக, அண்ணா நகர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொளத்துார், வெற்றி நகரில் வசிக்கும், யானைகவுனி காவல் நிலைய அமைச்சு பணியாளர் அரவிந்த், 28, என்பவர் வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதித்தனர்.
சோதனையில், வீட்டில் 3 கிராம் கோகைன் போதை பொருள் இருந்தது தெரிந்தது. விசாரணையில், வியாசர்பாடி, எம்.கே.பி., நகரை சேர்ந்த நரேஷ், 25 என்பவரிடமிருந்து வாங்கியதாக, அரவிந்த் ஒப்புக் கொண்டார். பின், நரேஷை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கிராம் கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நரேஷ் 'ஆன்லைனில் டிரேடிங்' தொழில் செய்து வருவதும், போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து கோகைன் வாங்கி விற்பனை செய்ததும் தெரிவந்தது.