/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கோனேரியில் சுகாதார சீர்கேடு
/
கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கோனேரியில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கோனேரியில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கோனேரியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 05, 2024 11:49 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சியில் உள்ள பள்ளிக்கூட தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், கடந்த மாதம் புதிதாக கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது.
இக்கால்வாயில் சேகரமாகும் கழிவுநீர் முழுமையாக வெளியேறும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தவில்லை.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்குவதால், இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், தொற்றுநோய் ஏற்பட்டு கோனேரிகுப்பத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறும் வகையில் வழித்தடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.