/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மேன்ஹோலில்' இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கும் அவலம்

ADDED : ஆக 14, 2024 10:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 15வது வார்டில், பல்லவர்மேடு அருந்ததியர்பாளையம் பகுதியில், பாதாள சாக்கடைதிட்டம் பைப்லைன்செல்கிறது.
இங்குள்ள அம்மன் கோவில் அருகே, 'மேன்ஹோலில்' இருந்து கழிவுநீர் வெளியேறி, பள்ளத்தெருவில் தேங்கிநிற்கிறது.
இந்த கழிவுநீர் சகதியில், அப்பகுதியினர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பல்வேறு விதமான நோய் பரவும்அபாயம் உள்ளது.குறிப்பாக, பல்லவர் மேடு கன்னியம்மன்கோவில் தெரு,மடம் தெரு உள்ளிட்டபல்வேறு தெருக்கள்வழியாக செல்லும்பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டால், பல்லவர்மேடு அருந்ததியர் பாளையத்தில் இருக்கும் மேன்ஹோலில் கழிவுநீர் வெளியேறி தேங்குகின்றன.
எனவே, பல்லவர்மேடு அருந்ததியர்பாளையம் பகுதி மேன்ஹோலில் இருந்து, தினசரி கழிவுநீர் வெளியேறுவதைமுற்றிலும் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.