/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
மாத்துார் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : செப் 01, 2024 01:45 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரகடம் அடுத்த, மாத்துார் காட்டேரி குளம் அருகே, மழைநீர் வடிகால் சேதமடைந்து, அதிலிருந்துகழிவுநீர் சர்வீஸ் சாலையில் வெளியேறி வருகிறது.
இதனால், வாகன ஓட்டி கள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் வடிகாலை சரி செய்து, சாலையில் கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.