/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு
ADDED : மே 01, 2024 12:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஆனந்தாபேட்டை சந்து பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், மூன்று நாட்களுக்கு முன், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடிய கழிவுநீர், திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலை வரை சென்றது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பெயரளவிற்கு அடைப்பை நீக்கினர். ஆனால், நேற்று காலை வழக்கம்போல கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.
இதனால், ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.