/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 07, 2024 11:38 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை வழியாக கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், விநாயகர் சதுர்த்திக்கு தேவையான களிமண் விநாயகர் சிலைகள், பூக்கள், பழ வகைகள், பொறி கடலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நேற்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்தன.
பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க வழக்கத்தைவிட நேற்று ரயில்வே சாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், ராஜாஜி மார்க்கெட் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறிய கழிவுநீர், துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடியது.
இதனால், இச்சாலையில் நடந்து சென்றவர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பூஜை பொருட்கள் விற்பனை செய்ய சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேகமாக சென்ற வாகனங்களால் கழிவுநீர் தெளித்ததால், பாதசாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இப்பகுதியில், இரு நாட்களாக வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.