/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் சனி மஹா பிரதோஷ வழிபாடு
/
காஞ்சியில் சனி மஹா பிரதோஷ வழிபாடு
ADDED : செப் 01, 2024 02:01 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோவிலில், சனி மஹா பிரதோஷத்தையொட்டி மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், இளநீர், சந்தனம், தேன், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு நறுமணம் கமழும் திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சனி மஹா பிரதோஷத்தையொட்டி நேற்று மூலவருக்கும், நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம், சனி மஹா பிரதோஷத்தையொட்டி மூலவர் அகத்தீஸ்வருக்கும், மூலிகையால் உருவாக்கப்பட்ட மஹா மூலிகை நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை உக்கம்பெரும்பாக்கத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் நேற்று மாலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் கிழக்கு கரை, வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, எடமச்சி முத்தீஸ்வரர் கோவில், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, காந்தி சாலை வன்னீஸ்வரர், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர், கருவேப்பம்பூண்டி காசிவிஸ்வநாதர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
சனி மஹா பிரதோஷத்தையொட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் சிவபெருமானையும், நந்தி பகவானையும் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.