/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மாற்றி யோசித்த உடன்பிறப்புகள் டூ -- வீலரில் தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரம்

ADDED : மார் 25, 2024 05:29 AM

காஞ்சிபுரம் : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் பிரசாரம் செய்யவும், வேட்பாளர்கள் தங்களது சின்னம் குறித்து விளம்பரம் செய்யவும் தேர்தல் கமிஷன் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதில், நகர்ப்புறங்களில் வீடு மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரம் எழுதவும், போஸ்டர் ஒட்டவும், டிஜிட்டல் - பிளக்ஸ் பேனர் வைக்கவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதனால், மாற்றி யோசித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தி.மு.க., வினர், தங்களது டூ - வீலரில், முன்னும், பின்னும், தேர்தல் பிரசார துண்டு பிரசுர ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதில், தேர்தல் நாள், ஈ.வே.ரா., முன்னாள் முதல்வர்கள் அண்ணாரை, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, இண்டியா கூட்டணி காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளர் செல்வம் ஆகியோர் புகைப்படங்களுடன், உதயசூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளது.
பொது இடங்களில் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு நிபந்தனை விதித்தாலும், மாற்றி யோசித்த உடன்பிறப்புகள், இப்ப என்ன செய்வீங்க என, தேர்தல் கமிஷனை குழப்பும் வகையில், நுாதன முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.