sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயில் திட்ட பணிகளில் திறன் மேம்பாடு காஞ்சியில் உருவாகும் சிறப்பு பொறியாளர்கள்

/

ரயில் திட்ட பணிகளில் திறன் மேம்பாடு காஞ்சியில் உருவாகும் சிறப்பு பொறியாளர்கள்

ரயில் திட்ட பணிகளில் திறன் மேம்பாடு காஞ்சியில் உருவாகும் சிறப்பு பொறியாளர்கள்

ரயில் திட்ட பணிகளில் திறன் மேம்பாடு காஞ்சியில் உருவாகும் சிறப்பு பொறியாளர்கள்


ADDED : ஜூன் 26, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, நீர்வள்ளூர் கிராமத்தில், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு, ரயில் இருப்பு பாதை, ரயில் நிலையம், மின் ரயில் வழித்தடம், மெட்ரோ ரயில் வழித்தடம், பூமிக்குள் செல்லும் ரயில் வழித்தடம் ஆகியவை அமைக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் படித்தவர்களை தேர்வு செய்து, இந்த பயிற்சி மையத்தில் ரயில்வே திட்டம் தொடர்பாக சிறப்பு பயிற்சி அளித்து, சிறந்த பொறியாளர்களை உருவாக்கி வருகின்றன.

குறிப்பாக, தமிழகம் மட்டுமல்லாது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வங்கதேசம், ஜப்பான், மொரீஷியஸ் உள்ளிட்ட பிற நாடுகளில், ரயில்வே திட்டம் மற்றும் அதை சார்ந்த பணிகளில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வள்ளூர் லார்சன் அண்டு டூப்ரோ ரயில்வே திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், 1 லட்சம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலமாக, 7,600 சிறந்த பொறியாளர்களை இந்த ரயில் கட்டுமான நிறுவனம் உருவாக்கி உள்ளது என, கட்டுமான தொழில் நிறுவனத்தினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து, லார்சன் அண்டு டூப்ரோ ரயில்வே கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி மைய முதல்வர் ராபர்ட் ராஜசேகரன் கூறியதாவது:

ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளை பொறுத்தவரையில், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் எந்தெந்த வேலை செய்கின்றனர் என, ரகசியம் காக்கப்பட்டு வந்தது. அதன் பின், ஒவ்வொரு துறையிலும், ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.

ரயில்வே துறையில் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், 2012ல், திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை துவக்கியது.

அதன் முதல்வராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறேன். இங்கு, பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் படித்தவர்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்கிறோம்.

அவர்களுக்கு, ரயில்வே கட்டமைப்பு தொடர்பாக, எட்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக, 45 நாட்கள் ரயில் இருப்புப்பாதை, சிக்னல் அமைப்பு, மின் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பல வித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் தேர்வாகும் நபர்களுக்கு, தனித்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் தனித்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு, 13 ஆண்டுகளில், 7,600 பொறியாளர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்.

மொரீஷியஸ் மெட்ரோ ரயில் திட்டம், டாகா மெட்ரோ ரயில் வழித்தடம், கெங்கன் சுரங்க ரயில்பாதை, ஹரியானா- - ராஜஸ்தான் -- குஜராத் இடையே, மின் ரயில் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களை உருவாக்கி உள்ளோம்.

மேலும், ரயில் நிலையம், ரயில் பயணியரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us