/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்மேற்கு பருவமழை இரட்டிப்பாக பதிவு
/
தென்மேற்கு பருவமழை இரட்டிப்பாக பதிவு
ADDED : ஆக 18, 2024 11:43 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வருகிறது. ஜூனில் மிதமாக பெய்த மழை, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களில், கனமழை பெய்தது.
ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில், அன்றாடம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், வழக்கத்தை காட்டிலும் கூடுதலாகவே இம்முறை மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் ஐந்து தாலுகாக்களிலும், ஜூன் மாதம் முதல், ஆக., 17 வரையிலான இரண்டரை மாதங்களில், 25.7 செ.மீ., மழை இயல்பாக பெய்திருக்க வேண்டும்.
ஆனால், 108 சதவீதம் கூடுதலாக பெய்து, 53.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. பாலாற்றில் நீர்வரத்து மெல்ல துவங்கி உள்ளது.

